காமாட்சியம்மன் கோவில் திருவிழா


காமாட்சியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 21 May 2022 4:01 PM GMT (Updated: 2022-05-21T21:43:16+05:30)

அரூரில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தர்மபுரி

அரூர்:

அரூரில் காமாட்சியம்மன், கோட்டை காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கொடியேற்றம், கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதலும், தொடர்ந்து அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம், மாவிளக்கு ஊர்வலம், 108 தீப்பந்தங்களுடன் சாமிகள் தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இதையடுத்து கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது. நேற்று சாமிக்கு திருக்கல்யாணமும், சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

---


Next Story