வேடசந்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

வேடசந்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வேடசந்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் கடைவீதியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி 200-க் கும் மேற்பட்ட பக்தர்கள் ஈரத்துணியுடன் கோவிலை சுற்றி வந்து, பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள், தங்களது கைக்குழந்தைகளை தோளில் சுமந்தபடி பூக்குழி இறங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com