பள்ளங்கோயில் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா


பள்ளங்கோயில் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா
x

பள்ளங்கோயில் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:-

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளங்கோயிலில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஒரு வாரத்துக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினசரி சாமி வீதி உலா நடந்தது. அதேபோல் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் சிங்க வாகனத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story