மணப்பள்ளி முனியப்பன் கோவில் திருவிழா


மணப்பள்ளி முனியப்பன் கோவில் திருவிழா
x

மோகனூர் அருகே மணப்பள்ளி முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் அருகே மணப்பள்ளியில் முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 19-ந் தேதி வேல் எடுத்து, காவிரி ஆற்றுக்கு சென்று காப்பு கட்டி திருவிழா நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினசரி வேல் ஊர்வலமாக எடுத்துச் சென்று பூஜை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 26-ந் தேதி மணப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மணப்பள்ளி சொக்கநாயகி அம்மன் கோவிலில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் நேற்று அதிகாலை வேல் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் கிடா வெட்டுதல், மதியம் மஞ்சள் நீராட்டுதல் விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு வான வேடிக்கையுடன், மாவிளக்கு அழைத்து வந்து கோவிலில் மாவிளக்குபூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story