முருகன் கோவில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி


முருகன் கோவில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 22 May 2023 6:45 AM GMT (Updated: 22 May 2023 6:46 AM GMT)

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் மற்றும் நீராழி மண்டபம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி பாசி தேங்கி உள்ளது. படிகளில் செடிகள் முளைத்து புதர்களுடன் காணப்பட்டது. மேலும் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கும் மதுப்பிரியர்கள் இக்குளத்தில் அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை வீசிச் சென்றனர். இதனால் குளத்திலும், குளத்தைச் சுற்றியும் மதுபாட்டில்கள் கிடந்தன.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி சார்பில், இக்கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியை நேற்று மேற்கொண்டனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி தலைமையில் நடந்த பணியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். இவர்கள் குளத்தின் படிக்கட்டில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, குப்பை மற்றும் மதுபாட்டில்களை சுத்தம் செய்தனர். மேலும் குளத்தைச் சுற்றிலும் வெள்ளை அடித்து அழகுபடுத்தி, இங்கு மாமிசம் சாப்பிடக்கூடாது என்றும், மது அருந்தக்கூடாது என்றும் அறிவிப்பு பலகை வைத்தனர்.


Next Story