தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டு போட்டி

வாணாபுரம் அரசு பள்ளியில் தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டு போட்டி
Published on

வாணாபுரம்

வாணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தண்டராம்பட்டு, தானிப்பாடி, மெய்யூர், காம்பட்டு, வாணாபுரம், குரிகிளம்பூர், பவித்திரம் மற்றும் தனியார் பள்ளிகள் என 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் விளையாடும் கைப்பந்து, எரிபந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

பின்னர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயசீலன், கிருஷ்ணமூர்த்தி, முகமதுநபி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com