கூரை வீடு எரிந்து சேதம்


கூரை வீடு எரிந்து சேதம்
x

சீர்காழியில் கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி திருக்கோலக்கா தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 58). இவரது கூரை வீடு நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராமலிங்கம் எம்.பி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், நகரமன்ற உறுப்பினர்கள், நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஆர்.ஆர். ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகில் தேர் வடக்கு வீதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரை ராமலிங்கம் எம்.பி. பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story