முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் மேல்முறையீட்டு மனு விசாரணை 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இந்த நிலையில் செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில், கீழ்கோர்ட்டு விதித்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 22-ந் தேதியும், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சார்பில் கடந்த 5-ந் தேதியும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று மாவட்ட நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சார்பில் வக்கீல் ரவீந்திரனும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சார்பில் வக்கீல் ஹேமராஜனும் ஆஜராகினர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகி, அரசு தரப்பு வக்கீல் ஆஜராக காலஅவகாசம் கேட்டனர். இதையடுத்து 2 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி பூர்ணிமா அம்மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story