ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு


ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 11 July 2023 2:11 AM IST (Updated: 11 July 2023 4:54 PM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரழந்தான்.

தஞ்சாவூர்

திருவையாறு:

திருவையாறு அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்.

ஆற்றில் மூழ்கிய சிறுவன்

திருவையாறை அடுத்த நடுக்கடை முகமது பந்தர் ரஹீம்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜாதிக்பாட்சா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி யாஸ்மின். இவர்களுக்கு 3 மகன்கள்.இவர்களின் வீட்டின் பின்புறம் குடமுருட்டி ஆறு ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூத்த மகன் அகமதுபயாஸ் (6 வயது), இளைய மகன் ஆசிப்அகமது (5) ஆகிய இருவரும் குடமுருட்டி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். இதில் ஆசிப்அகமது ஆற்றில் இறங்கி விளையாடிய போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்.

உடல் கரை ஒதுங்கியது

இதை பார்த்த அகமதுபயாஸ் வீட்டுக்கு ஓடி சென்று தனது தாயாரிடம் ஆற்றில் தம்பி மூழ்கி மாயமானது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு சென்று தேடிப்பார்த்தும் ஆசிப் அகமது கிடைக்கவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புதுறை படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று குடமுருட்டி ஆற்றின் வடகரையில் ஆசிப்அகமது உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story