மதுபோதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற சிறுவன்

மதுபோதையில் தகராறு செய்த தந்தையை சிறுவன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுபோதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற சிறுவன்
Published on

வத்திராயிருப்பு, 

மதுபோதையில் தகராறு செய்த தந்தையை சிறுவன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுபோதையில் தகராறு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர், அந்த தொழிலாளி. அவருக்கு வயது 41. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான அந்த தொழிலாளி, வீட்டில் இருந்த ரூ.4 ஆயிரத்தை எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த சிறுவன், மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கண்டித்து உள்ளான்.

வெட்டிக்கொலை

அப்போது தொழிலாளிக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த சிறுவன், திடீரென தொழிலாளியை அரிவாளால் வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூமாப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தொழிலாளியின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொழிலாளியின் மகனான 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com