வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை வழியாக வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது.

அகல ரெயில்பாதை

திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி- திருக்குவளை- வேளாங்கண்ணி அகல ெரயில் பாதை பணி கடந்த 2013-ம் ஆண்டு மத்திய ெரயில்வே நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்காக ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திட்ட மதிப்பீடு ரூ.132 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. அகல ெரயில் பாதை சுமார் 33 கி.மீ. தூரம் உள்ளது. வேளாங்கண்ணி மேலபிடாகை, சித்தாய்மூர், திருக்குவளை வழியாக அகல ெரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 11 ஆற்றுபாலங்கள், 60 மதகுபாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணியில் இருந்து கேரளா செல்லும் விரைவு ெரயில்கள் இவ்வழியே இயக்கப்பட்டால் 170 கிலோமீட்டர் பயண நேரம் குறையும். பயண செலவும், எரிபொருள் செலவும் மிகவும் குறையும்.

விரைந்து முடிக்க வேண்டும்

எனவே மத்திய ரெயில்வே அமைச்சர் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருக்குவளை வழியாக வேளாங்கண்ணி செல்லும் அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் மக்களை திரட்டி சாலை மறியல் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story