கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

வேலூர் அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வேலூரை அடுத்த மேட்டு இடையம்படி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் உடல்நலம் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் மணிகண்டன் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாகாயம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com