மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட விவகாரம்..காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி


மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட விவகாரம்..காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி
x

ராஜசேகரை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றி, காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

காஞ்சிபுரம்,

தனது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், கூவத்தூர் காவல் நிலையத்தில் மதுபோதையில், நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி, அலப்பறை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், போலீசார் நாகராஜை தாக்கியதால் கால் உடைந்து மாவுகட்டு போடப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் கூவத்தூர் காவல்நிலைய தலைமை காவலர் ராஜசேகர் என்பவர், நாகராஜை தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து ராஜசேகரை காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றி, காவல் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதோடு, கூவத்தூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story