பல் டாக்டர் திடீரென மயங்கி விழுந்து சாவு

பல் டாக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
பல் டாக்டர் திடீரென மயங்கி விழுந்து சாவு
Published on

தூசி

பல் டாக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை கிராமம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மகன் கணேஷ் குமார் (வயது 38), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் டாக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை இவர் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆக்கூர் ஆரம்ப நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக டாக்டர் கணேஷ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசாதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கணேஷ்குமாரின் தந்தை மோகன் குமார், தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தூசி இன்ஸ்பெக்டர் குமார் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com