துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி.தற்கொலை செய்தது எப்படி?


துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி.தற்கொலை செய்தது எப்படி?
x
தினத்தந்தி 9 July 2023 1:45 AM IST (Updated: 10 July 2023 12:29 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

கோயம்புத்தூர்

துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

டி.ஐ.ஜி. தற்கொலை

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது பாதுகாவலரான ரவிச்சந்திரனின் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் டி.ஐ.ஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். அவருடைய புகாரின் பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அதில் கூறப்பட்டு உள்ள விவரங்கள் வருமாறு:-

9 எம்.எம். ரக துப்பாக்கி

எனது பெயர் ரவிச்சந்திரன். நான் கடந்த 2011-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தேன். ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன்.

இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து, 183 என்ற 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது. எனக்கு டி.ஐ.ஜி. முகாம் அலு வலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கி நான் பணியாற்றி வருகிறேன்.

தூக்கத்திற்கு மாத்திரை

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் டி.ஐ.ஜி. விஜயகுமார் இங்கு வந்தார்.

அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மாத்திரை எடுத்து கொள்கிறேன் என்று தெரிவிப்பார். தினமும் தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த 6-ந் தேதி நான் முகாம் அலுவலகத்தில் இருந்தேன்.

அப்போது டி.ஐ.ஜி. குடும்பத்துடன் வெளியில் சென்றார். பாது காப்புக்காக நாங்களும் சென்றோம். இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். அதன்பிறகு டி.ஐ.ஜி. வீட்டிற்குள் சென்று ஓய்வெடுத்தார்.

வழக்கு குறிப்புகள்

டி.ஐ.ஜி விஜயகுமார் தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.ஆர். அறைக்கு வந்து டி.எஸ்.ஆரை (தினமும் பதிவாகும் வழக்கு குறிப்புகள்) பார்ப்பது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் வழக்கத்திற்கு மாறாக அவர் காலை 6.30 மணிக்கெல்லாம் டி.எஸ்.ஆர். அறைக்கு வந்தார்.

அவர், முகாம் அலுவலகத்தில் இருந்த ரவிவர்மா என்பவரிடம் பால் கேட்டார். அவரும் பால்காய்ச்சி கொடுக்கவே அதை வாங்கி அவர் குடித்தார். இதைபார்த்த நான் டி.எஸ்.ஆரை எடுத்து கொண்டு அவரிடம் செல்ல முயன்றேன்.

துப்பாக்கி கேட்டார்

ஆனால் அதற்குள்ளாக சரியாக 6.40 மணிக்கெல்லாம் அவரே டி.எஸ்.ஆர். கேட்டு நான் தங்கி இருக்கும் அறைக்கே வந்து விட்டார். அவர், 'ரவிச்சந்திரன் டி.எஸ்.ஆர். எங்கே கொடுங்கள், பார்ப்போம் "என கேட்டார்.

உடனே நான் அதை கொடுத்ததும் வாங்கி பார்த்தார். பின்னர் நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்கு டி.ஐ.ஜி. சென்றார்.

அங்கு சென்றவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதை பார்த்தார். அதன்பிறகு "இந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும்" என என்னிடம் கேட்டார். நான் சொல்லி கொண்டு இருந்த போதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார்.

ரத்தகாயங்களுடன் கிடந்தார்

உடனே நான் டி-சர்ட் அணிந்து கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த டிரைவர் அன்பழகனும் ஓடி வந்து பார்த்தோம்.

அப்போது டி.ஐ.ஜி. மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அவரின் அருகிலேயே கிடந்தது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியான நாங்கள், அவரது மனைவியி டம் தெரிவிக்க சத்தம் போட்டு கொண்டே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு, அவரும் ஓடி வந்து என்ன என்று கேட்டார்.

நாங்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனடியாக அனைவரும் சேர்ந்து, முகாம் அலுவலகத்தில் இருந்து ஒரு காரில் உயிருக்கு போராடிய டி.ஐ.ஜி.யை தூக்கி கொண்டு காலை 7 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

செல்போன் பேச்சு ஆய்வு

செல்லும் வழியிலேயே இதுபற்றிய தகவலை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன். ஆஸ்பத்திரியில் டாக்டர் கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்த னர். இதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

ஆனால் அவர் என்ன காரணத்துக்காக சுட்டுக்கொண்டார் என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யார் யாரிடம் பேசியுள்ளார். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story