விபத்தில் டிரைவர் சாவு

விபத்தில் டிரைவர் சாவு
Published on

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள கிழக்குத் தெருவில் வசித்து வந்தவர் எட்டிக்கண் (வயது 73). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு இவர் தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சேந்தமங்கலம் அருகே செல்லும் நெடுஞ்சாலை வழியை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக எட்டிக்கண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com