ரெயில்வே கேட்டை பூட்டிவிட்டு அறையில் குரட்டை விட்டு தூங்கிய கேட் கீப்பர்! கோபமடைந்து தட்டி எழுப்பிய பொதுமக்கள்


ரெயில்வே கேட்டை பூட்டிவிட்டு அறையில் குரட்டை விட்டு தூங்கிய கேட் கீப்பர்!  கோபமடைந்து தட்டி எழுப்பிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2023 10:31 AM IST (Updated: 27 Jun 2023 11:46 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே ரெயில்வே கேட்டை பூட்டுவிட்டு அறையில் கேட் கீப்பர் குரட்டை விட்டு தூங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே அச்சரப்பாக்கம் ரெயில்வே லெவல் கிராசிங் கேட்டை பூட்டிவுட்டு கேட் கீப்பர் தனது அறையில் தூங்க சென்று விட்டார். ரெயில் சென்று சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகியும் கேட்டை திறக்காததால் கோபமடைந்த மக்கள் அறைக்கு சென்று அவரை தட்டிப் எழுப்பி உள்ளனர். அப்போது அவர் நன்றாக குரட்டை விட்டு தூங்கியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இரு பக்கமும் காத்திருந்த மக்கள் கேட் கீப்பர் ஆனந்தை திட்டி தீர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story