புதிதாக அமைக்கப்படும் நடைமேடையை ஆய்வு செய்த பொது மேலாளர்


புதிதாக அமைக்கப்படும் நடைமேடையை ஆய்வு செய்த பொது மேலாளர்
x

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மேலும் 2 நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மேலும் 2 நடைமேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதை தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார்.

பொதுமேலாளர் ஆய்வு

குமரி மாவட்டத்தில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஊட்டுவாழ்மடம் பழையாற்றின் குறுக்கே, ஒழுகினசேரி சந்திப்பில் ரெயில்வே மேம்பாலம் அருகே உள்பட பல இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளும் நடக்கிறது. இதேபோல நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மேலும் 2 நடைமேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று நாகர்கோவில் வந்தார். இதற்காக அவர், மதுரையில் இருந்து தனி ரெயில்வே ஆய்வு வாகனம் மூலம் வந்தார். வரும் வழியில் ஆய்வு வாகனத்தில் இருந்தபடியே இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட்டார்.

சுரங்கப்பாதை

ஊட்டுவாழ்மடத்தில் நடைபெற்று வரும் பாலப்பணிகள், சுரங்கப்பாதை பணிகள், ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணிகளின் தற்போதைய நிலவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர், அவர் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் வருகையையொட்டி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story