போலி பத்திரங்கள் தயாரித்து கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும்; இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி


போலி பத்திரங்கள் தயாரித்து கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும்; இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி
x

போலி பத்திரங்கள் தயாரித்து கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

ஈரோடு

போலி பத்திரங்கள் தயாரித்து கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

பிரசார பொதுக்கூட்டம்

இந்து முன்னணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், துணைத்தலைவர் நா.சண்முகசுந்தரம், துணை அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ், மாநில செயலாளர் சி.பி.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவின் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரத்தை கடந்த மாதம் 28-ந்தேதி திருச்செந்தூரில் தொடங்கினோம். இன்று (அதாவது நேற்று) 18-வது நாளாக ஈரோட்டில் நடக்கிறது. இந்த பிரசார பயணத்தினை வருகிற 31-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளோம்.

ஆர்ப்பாட்டம்

இந்துக்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். இந்துக்களிடையே பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பயணத்தை நடத்தி வருகிறோம். கல்லூரி படிப்பிலும், கல்வி பயில்வதிலும் சரி இந்துக்களின் உரிமை மறுக்கப்படுகிறது. ஈரோடு மாநகரில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவில் இடத்தினை ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இங்குள்ள அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கின்றனா். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றாவிட்டால் இந்து முன்னணி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

போலி பத்திரம்...

இந்து முன்னணி சார்பில் தமிழக அறநிலையத்துறை அமைச்சரிடம், ஊதியூரில் 1,300 ஏக்கர் நிலம், மன்னார்குடியில் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்பட எந்தெந்த கோவில் இடங்களை மீட்க வேண்டும் என பட்டியல் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் நிலங்களில் குத்தகை இருப்பவர்களுக்கு இன்றைய நிலவரத்திற்கு குத்தகை தொகை வசூல் செய்ய வேண்டும்.

போலி பத்திரங்கள் தயாரித்து கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறைக்கு 75 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை கோர்ட்டு விதித்துள்ளது. அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

இதேபோல் ேகாபியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், 'பழனி, திருச்செந்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. அதைக்கொண்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்,' என்றார்.

1 More update

Next Story