காவலாளி திடீர் சாவு

விருதுநகர் அருகே காவலாளி திடீரன இறந்தார்.
காவலாளி திடீர் சாவு
Published on

விருதுநகர் அருகே உள்ள ஓ.சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 42). இவருடைய மனைவி மகேஸ்வரி (31). இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் ராஜ்மோகன் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் மகேஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். ராஜ்மோகன் தனது சகோதரி வீட்டில் தங்கி கட்டனார்பட்டியில் உள்ள ஒரு குவாரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சாப்பாடு வாங்க சென்ற ராஜமோகன் மத்திய சேனை கண்மாய்க்கு எதிரே காயத்துடன் இறந்து கிடந்தார். அருகில் மது பாட்டில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ராஜ்மோகனின் சகோதரி தனலட்சுமி தனது உறவினருடன் சென்று ராஜ்மோகன் உடலை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com