மழையால் வீட்டுச் சுவர் இடிந்தது

செங்கோட்டை அருகே தொடர் மழையால் குடிசை வீட்டின் சுவர் திடீரென இடிந்தது.
மழையால் வீட்டுச் சுவர் இடிந்தது
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே மேக்கரை கிராமத்தில் அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் வசித்து வருபவா கருப்பையா. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஆறுமுகத்தாய். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் தொடா மழை காரணமாக வீட்டின் சுவர் நனைந்து இருந்தது. இரவில் அந்த வீட்டின் முன்பக்க சுவர் திடீரன இடிந்து விழுந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com