வீடு தீயில் எரிந்து சேதம்


வீடு தீயில் எரிந்து சேதம்
x

சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல்- கண்டனூர் சாலையில் முத்துக்கருப்பன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வீட்டின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து மரப்பொருட்கள் , வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது

சிவகங்கை

காரைக்குடி,


சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல்- கண்டனூர் சாலையில் முத்துக்கருப்பன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. முத்துக்கருப்பன் திருச்சியில் வசித்து வருகிறார். இங்குள்ள வீட்டின் பின்புறத்தில் இரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வீட்டின் முன் பகுதியில் இருந்த தேக்கு மரத்தூண்கள் உள்ளிட்ட மரத்தாலான பொருட்கள், வாடகைக்கு குடியிருந்தோர் நிறுத்தி வைத்திருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story