தும்பு ஆலைக்கு தீ வைத்தவர் கைது

தட்டார்மடம் அருகே தும்பு ஆலைக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
தும்பு ஆலைக்கு தீ வைத்தவர் கைது
Published on

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே அதிசயபுரத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் சுவிஸ்கார் ஜோசப் (வயது 29). இவர் அப்பகுதியில் தும்பு ஆலை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தும்பு ஆலையை மூடி விட்டு ஆலயத்துக்கு சென்றார். அப்போது தும்பு ஆலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது, தும்பு ஆலையில் எந்திரம், பொருட்கள் எரிந்து சேதமடைந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த ஏனோக் மகன் ஞான்ராஜ் (37) என்பவர், தும்பு ஆலைக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஞான்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com