ரேஷன் கடை விற்பனையாளரை மிரட்டியவர் கைது
ரேஷன் கடை விற்பனையாளரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காட்டகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் துர்கா தேவி (வயது 25). இவர் மீன்சுருட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் கொல்லாபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா (40) என்பவர் ஆதார் இல்லாத நபரின் ரேஷன் கார்டுக்கு பொருட்களை கேட்டு துர்கா தேவியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த கைரேகை எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் அவர் துர்கா தேவியை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துர்கா தேவி அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.