பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய கும்பல்


பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கிய கும்பல்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே பஸ் டிரைவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே பஸ் டிரைவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பஸ் டிரைவர் மீது தாக்குதல்

ராமநாதபுரம் மகாசக்தி நகரை சேர்ந்தவர் முத்துராக்கு என்பவரின் மகன் குமார் (வயது 45). இவர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக நகர் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் இருந்து ரெகுநாதபுரத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

அப்போது ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு சிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த இடத்திற்கு சென்ற குமார் ஹாரன் அடித்து அவர்களை கண்டித்து விலகச்செய்துள்ளார். இதன்பின்னர் பஸ்சில் ரெகுநாதபுரம் சென்று பயணிகளை இறக்கிவிட்டு டீக்குடித்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் டிரைவர் குமாரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதோடு இரும்பு கம்பியால் அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம்.

பஸ்களை இயக்காமல் போராட்டம்

இதில் படுகாயமடைந்த குமார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த அந்த வழியாக சென்ற டிரைவர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பஸ்களை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ரெகுநாதபுரம் மேலவலசை சந்திரசேகர் மகன் சூர்யா (22), சந்தோஷ் (20), பழனிக்குமார் மகன் யுவராஜ் (22), சரண் (25), முத்துக்குமார் மகன் நிதிஷ்குமார் (23), ஈஸ்வரி மகன் டார்வின் (24), பழனிக்குமார் மகன் கவின் (24) உள்பட 8 பேரை கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story