பேரூராட்சி ஊழியரிடம் தகராறு செய்தவர் கைது


பேரூராட்சி ஊழியரிடம் தகராறு செய்தவர் கைது
x

தக்கோலத்தில் பேரூராட்சி ஊழியரிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

தக்கோலம் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஜார் தெருவை சேர்ந்த வெங்கட்ரமணன் என்பவர் பேரூராட்சி கம்ப்யூட்டர் ஊழியர் வெங்கடேசன் என்பவரிடம் வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி வழங்கக்கோரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கட்ரமணனை கைது செய்தனர்.

1 More update

Next Story