விஷம் குடித்த விவசாயி சாவு
விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 65). விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக ரத்த கொதிப்பு மற்றும் பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் நோய் குணமாகாததால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு தெளிக்க பயன்படும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் பழனியாண்டியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பழனியாண்டியின் மகன் ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.