பெண் ஊழியருடன் சேர்ந்து சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி - மனைவி புகாரில் நிர்வாகி கைது


பெண் ஊழியருடன் சேர்ந்து சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி - மனைவி புகாரில் நிர்வாகி கைது
x

கோவை அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.4.50 கோடி மோசடி செய்த கணவர் மற்றும் பெண் கணக்காளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது43). இவருடைய மனைவி ஜிஷா(40). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை வீரபாண்டி பிரிவில் ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினார். அதில் என்னை நிர்வாக இயக்குனராகவும், எனது கணவரை பொதுமேலாளராகவும் நியமித்தார்.

எனது கணவர், அங்கு கணக்காளராக வேலை பார்த்த கலைச்செல்வி(40) என்பவருடன் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார். அவர்கள் இருவரும் ஜி.எஸ்.டி. தொகை மற்றும் தொழில்வரி ஆகியவற்றை பல ஆண்டுகளாக செலுத்தவில்லை.

இதனால் அதிகாரிகள் எங்கள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதுதொடர்பாக விசாரித்தபோது, வரி செலுத்தியதாக கணக்குகாட்டிவிட்டு அதை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே எனது கணவர் மற்றும் பெண் கணக்காளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ரஞ்சித்குமார், கலைச்செல்வி ஆகியோர் சேர்ந்து ரூ.4 கோடியே 50 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story