பவானிசாகர் அருகே பரபரப்பு அரசு நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற பொதுமக்கள்
பவானிசாகர் அருகே அரசு நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே அரசு நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புறம்போக்கு நிலம்
பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தில் சுமார் 3½ ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர், அண்ணாநகர், கோடேபாளையம், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட சுமார் 50 பேர் திடீரென்று அங்கு குடிசை போட மூங்கில், கீற்றுகளுடன் வந்தனர்.
இதுகுறித்து தகவல் தெரிந்ததும் தொப்பம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பவானிசாகர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
பட்டா கொடுக்க முடியாது
அதன்பின்னர் குடிசை அமைக்க முயன்ற பொதுமக்களிடம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், 'இந்த இடம் கரடு புறம்போக்கு. இந்த பகுதியை சுற்றிலும் கல்குவாரிகள் இருப்பதால் வீட்டுமனை பட்டா கொடுக்க முடியாது. முறையாக தேைவ இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து வேறு இடம் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்' என்றார்.
அதை ஏற்றுக்கொண்டு குடிசை அமைக்க வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.