1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது


1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் சரக்கு ரெயிலுக்காக 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

திருவாரூர்

நீடாமங்கலம்ூ

நீடாமங்கலத்தில் சரக்கு ரெயிலுக்காக 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

ரெயில்வே கேட் மூடப்பட்டது

நீடாமங்கலத்தில் நேற்று காலை 5.05 மணியளவில் சரக்கு ெரயில் வருகைக்காக ெரயில்வேகேட் மூடப்பட்டது. காலிப்பெட்டிகளுடன் கூடிய சரக்கு ெரயில் மூன்றாவது நடைமேடை பகுதிக்கு வந்தது.

தொடர்ந்து பெட்டிகள் பிரித்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணி முடிந்து ரெயில் என்ஜின் இரண்டாவது நடைமேடை பகுதிக்கு வந்து நின்றது.இதற்கிடையே மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ெரயில் முதல் நடைமேடை பகுதிக்கு வந்து நின்று புறப்பட்டுச்சென்றது.

நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்

இதன் காரணமாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நீடாமங்கலம் கடைவீதியில் நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

1 மணிநேரத்திற்கு பின்னர் காலை 6.08 மணிக்கு ெரயில்வேகேட் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேம்பால பணியை தொடங்க கோரிக்கை

இந்த நிலையை போக்கிட தஞ்சை முதல் நாகை வரை இருவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நீடாமங்கலம் மேம்பாலம் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story