பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வேண்டும்


பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 10 July 2023 1:30 AM IST (Updated: 10 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பு செயலாளர் முருகேசன், மாநில தணிக்கையாளர் நல்லதம்பி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வை முற்றிலும் கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராடிய நாளை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கடந்த 10.3.2020-க்கு பிறகு எம்.பில். முடித்தவர்களுக்கும் உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பள்ளி கல்வித்துறையின் இணையதள பணிகளுக்கு பள்ளிகள் தோறும் தனி பணியாளரை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story