உத்தமசோழபுரத்தில் ஏலம்:கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது
உத்தமசோழபுரத்தில் ஏலம்:கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது
பனமரத்துப்பட்டி
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், 29 விவசாயிகளும், சேலம், வெள்ளக்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.62-க்கும், அதிகபட்சமாக ரூ.71.75-க்கும் விற்பனையானது. மொத்தம் 1.2 டன் அளவுள்ள கொப்பரை தேங்காய் ரூ.85 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார். கடந்்த வாரம் மொத்தம் 5.8 டன் எடையுள்ள கொப்பரை தேங்காய் ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்துக்கு ஏலம் போன நிலையில் இந்த வாரம் நடந்த ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.