தம்பதியை மிரட்டிய வாலிபர் கைது


தம்பதியை மிரட்டிய வாலிபர் கைது
x

தம்பதியை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 45). விவசாயியான இவர் தனது தோட்ட வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான மறக்குடி ரஸ்தாவைச் சேர்ந்த காற்றாலை தொழிலாளியான முத்துபாண்டியன் மகன் கார்த்திக் (27) என்பவர் மது போதையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கணேசமூர்த்தியைக் கண்டதும், தன்னை தூக்கி விடச் சொன்னாா். ஆனால் கணேசமூர்த்தி அவரைக் கண்டு கொள்ளாமல் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கணேச மூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவரை சாதியைக் குறித்து அவதூறாக பேசியதோடு, கையில் இருந்த அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதில் கணேசமூர்த்திக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் தகராறை தடுத்த கணேசமூர்த்தியின் மனைவி பேச்சியம்மாளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடினார்.

இதுகுறித்து கணேசமூர்த்தி மானூர் போலீசில் புகார் செய்தார். தாழையூத்து துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தார்.


Next Story