காய்கறி கடைக்குள் புகுந்த டிராக்டர்


காய்கறி கடைக்குள் புகுந்த டிராக்டர்
x

வத்திராயிருப்பு அருகே காய்கறி கடைக்குள் டிராக்டர் புகுந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளத்தில் இருந்து டிராக்டரில் மணல் ஏற்றி சென்று கொண்டு இருந்தனர். அப்போது கோட்டையூர் அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த மினி வேன் மீது டிராக்டர் மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டர் காய்கறி கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டர் ஓட்டி வந்த ராம்குமார் (வயது 35), டிராக்டரில் வந்த அய்யாசாமி (40) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டிராக்டர் மோதியதால் கடையின் முன்புற பகுதியும், காய்கறிகளும் சேதமடைந்தன. இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Next Story