அங்கன்வாடி மையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும்


அங்கன்வாடி மையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும்
x

காட்பாடி அருகே அங்கன்வாடி மையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

காட்பாடி

வேலூர் மின் பகிர்மான வட்டம் காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் காட்பாடி மகிமண்டலம் அடுத்த மித்தநத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்து செல்வதால் அந்த டிரான்ஸ்பர்மரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. .

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்தார்.

மேலும் இது போன்று பல்வேறு கோரிக்கைகள் குறித்து அதிகாரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.


Next Story