சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது

மன்னார்குடியில் சாலை தடுப்புச்சுவரில் லாரி மோதியது
திருவாரூர்
மன்னார்குடி:
மன்னார்குடி ருக்குமணி குளம் சந்திப்பில் மதுக்கூர் சாலை பிரிவில் சாலை நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சாலை சிறிது வளைவாக செல்வதால் வாகனங்கள் அடிக்கடி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி செங்கல் ஏற்றி சென்ற லாரி இந்த தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் நேற்று காலையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






