தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


தீரன் சின்னமலை நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

தீரன் சின்னமலையின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1 More update

Next Story