மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; மெக்கானிக் உள்பட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; மெக்கானிக் உள்பட 2 பேர் கைது
x

திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய மெக்கானிக் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

வாகன சோதனை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நேற்று திண்டிவனம்-மரக்காணம் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்கேமடைந்த போலீசார் விரட்டிச் சென்று, 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முத்து(வயது 34), அம்மன்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் சின்ன கவுண்டர்(31) ஆகியோர் என்பதும், இருவரும் திண்டிவனம், ஒலக்கூர், மயிலம், பிரம்மதேசம், ரோஷணை போலீஸ் சரகத்துக்குட்பட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடி சென்னை சென்று கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

10 மோட்டார் சைக்கிள்கள் மீ்ட்பு

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் திருடிய 10 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர். கைதான சின்ன கவுண்டர் செட்டித்தாங்கல் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திண்டிவனம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story