உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!


உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!
x
தினத்தந்தி 26 Sep 2023 4:11 AM GMT (Updated: 26 Sep 2023 4:29 AM GMT)

உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.

சென்னை,

இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார். கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வடிவேலு மூளைச்சாவு அடைந்தார், இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:- உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த தேனி செல்கிறோம். இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது என்று கூறினார்.


Next Story