கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் இந்து முன்னணியினரும் திரண்டதால் பரபரப்பு


கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் இந்து முன்னணியினரும் திரண்டதால் பரபரப்பு
x

ஆரணியில் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இந்து முன்னணியினரும் திரண்டதால் பணிகள் தீவிரமாக நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் கோவில் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. இந்து முன்னணியினரும் திரண்டதால் பணிகள் தீவிரமாக நடந்தது.

ஆரணி அண்ணா சிலை அருகில் காந்தி ரோட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலுக்கு முன்புறம் தனி நபர்கள் பெயிண்ட் கடை, பெட்டிக்கடை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றபோது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தரப்பில் நாங்கள் மேல் முறையீடு செய்து இருக்கிறோம் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதனிடையே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் நித்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், கண்ணதாசன் மற்றும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தொடங்கினர்.

இந்து முன்னணியினரும் கோவில் அருகாமையில் திரண்டு வந்தனர். அவர்களும் கோவில் நிர்வாகிகளோடு சேர்ந்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வலியுறுத்தினர். அதன்பின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

=========


Next Story