சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
Published on

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3 தீர்த்த குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், பல்வேறு செல்வங்களை பெறலாம் என்பதும் ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் ஆவணி மாத பிறப்பை ஒட்டி நேற்று அஸ்திர தேவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீர்த்தவாரி நடந்தது. இதனை அடுத்து அஸ்திரதேவர் 3 குளங்களிலும் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் புனித நீராடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com