சேலம்: ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்: ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Published on

சேலம்,

தமிழ்நாட்டில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, அவர் வேலூர் மண்டலத்தில் சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். அடுத்தகட்டமாக சேலம் மண்டல அளவிலான கள ஆய்வுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சேலம் மண்டல அளவிலான 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக்கூட்டம் இன்றும், நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சேலம் சென்றடைந்தார்.

விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஓமலூரில் நடைபெற்று வரும் திட்டங்களின் செயல்பாடு குறித்து வட்டாச்சியரிடம் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com