மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களில் பயன்பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களில் பயன்பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களில் பயன்பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
Published on

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தபட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கிகடன் மானிய வழங்கும் திட்டம், அனைத்து வகை திருமண நிதி உதவி தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இந்த மாதம் முதல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த சேவைகளை பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், செல்போன் எண், வங்கி கணக்கு புத்தக நகல், மற்றும் இணைய சேவையில் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் மேற்கண்ட 5 திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com