தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்


தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 31 May 2022 7:30 PM GMT (Updated: 31 May 2022 7:30 PM GMT)

நல்லூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம், பெண்கள் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நல்லூர் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறோம். எங்கள் ஊராட்சியில் மொத்தம் 500 பேர் இந்த திட்டத்தில் பதிவு செய்து வேலை செய்து வருகிறார்கள். இதில் கந்தம்பாளையம், நல்லூர் பகுதியை சேர்ந்த 250 பேருக்கு கடந்த சில நாட்களாக பணி கிடைக்கவில்லை. தற்போது ஊராட்சியில் நிதி இல்லை. எனவே 15 நாட்கள் மட்டும் பணி செய்ய சொல்கிறார்கள். எனவே தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story