விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

அரசு பஸ் ஜப்தி

ஈரோடு

பெருந்துறை அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராமசாமி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி பெருந்துறை கோட்டை முனியப்பன் கோவில் அருகே மொபட்டில் ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் ராமசாமி இறந்துவிட்டார்.

இதையடுத்து ராமசாமியின் மனைவி மனோன்மணி, மகன் அன்பு ஜவகர், மகள் உமா ராணி விபத்து நஷ்ட ஈடு கேட்டு பெருந்துறை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி விபத்தில் இறந்த ராமசாமியின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் வழங்கவேண்டும் என தீர்ப்பு கூறினார். ஆனால் போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் பெருந்துறை சப்-கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதைத்தொடர்ந்து மேல்முறையீடு தீர்ப்பில் ராமசாமியின் குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. ஆனால் போக்குவரத்து கழகம் அதையும் வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெருந்துறை சப்-கோர்ட்டு ராமசாமியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று பெருந்துறை பஸ்நிலையத்துக்கு வந்த கோர்ட்டு ஊழியர்கள் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றார்கள்.


Next Story