புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: ரூ.54 ஆயிரத்தை கடந்தது

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை: ரூ.54 ஆயிரத்தை கடந்தது
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. கடந்த 5-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.52 ஆயிரத்தை தாண்டியது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com