கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம்..!


கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம்..!
x

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தைச் செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தைச் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணி நாளை தொடங்குகிறது. இப்பணியில் 3,400 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

அதில் யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் இருக்கும் என்றும் முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் தமிழில் பலகை வைக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான முகாம் சென்னையில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story