நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

ஒரத்தநாடு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story