உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை


உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
x
தினத்தந்தி 10 July 2023 10:56 PM IST (Updated: 11 July 2023 2:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை ஆகிய உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் வெளிசந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் மூலமாக வரத்தை அதிகரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பேரில் திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை ஆகிய உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உழவர் சந்தைகளில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமை மூலம் விவசாயிகள் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் 320 கிலோ தக்காளியை, கிலோ ரூ.88 வீதம் விற்பனை செய்யப்பட்டது.இதுபோல் பல்லடம் உழவர் சந்தையில் 265 கிலோ தக்காளி கிலோ ரூ.85 வீதம் விற்பனை செய்யப்பட்டது. உடுமலை உழவர் சந்தையில் 300 கிலோ தக்காளி, கிலோ ரூ.79 வீதம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story