குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது . இதனால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com